ட்விட்டரில் கிறுக்கியவை
விரக்தியில் கெட்டவனாகும்
ஒருத்தனை அவ்வளவு எளிதில் நல்லவனாக மாற்றி விட முடியாது...
விம்மலை அடக்கி தலைகவிழ்ந்து
கண்ணீரடக்கும் பெண்ணையும், நடு ரோட்டில் திட்டும் அவள் கணவனையும் பார்க்கும் போது பாரதியை அல்பாயுசில்
கொன்ற யானை மேலெல்லாம் கோவம் வருகிறது.
--*--*--
நாளை விடியலில் சூரியனை முந்தி உன் முகத்தை தரிசித்திட வேண்டும். உள்ளுணர்வு என்ற உறக்கமற்ற ஒரு கோழி இப்பொழுதே கூவுகிறது.
இரவு முழுவதும் தூங்கவிடாத ரீங்காரக்கொசுவும் ரோந்துப்போலீசும்
ஏனோ இன்று இல்லை. இன்றாவது கனவு என்றால் என்ன என்று யாரேனும் கற்றுத்தாருங்களேன்...
இன்றைப்போல் ஒரு கரிய இரவில் தான் உன்னை பிரிய நேர்ந்தது. நானும் நீயும் எதிரெதிர் திசைகளில் அழுததை வெளிச்சமில்லா
அந்த இரவு பார்த்ததா தெரியவில்லை...
மொட்டைமாடியில் உன் நினைவுகளோடு உலவிக்கொண்டிருக்கையில் காற்றென்னும்
அழகி எனை மெல்ல வருடி அவள் உடலிருக்கும் குளிரகற்ற வேண்டினாள். இழுத்து போர்த்திக்கொண்டேன் என் கற்பை...
தூக்கமில்லா இன்றைய இரவிலும் ஜன்னல் வழி வானம் பார்க்கிறேன். அதே நட்சத்திரம். ஆனால் இன்றும் வேறு விஷயம் சொல்கிறது. கேட்டால் காரணம் சொல்லாமல் கண்சிமிட்ட மட்டும் செய்கிறது.
பல வருடங்கள் கழித்து இன்றிரவு ஊர் நுழைகிறேன். இருட்டிலும் நாம் முன்பலைந்த இடம் தேடி, எனக்கு முன்னால் ஓடியமர்கின்றன
என் நினைவுகள்.
பகல் சொல்லித்தராத
பலவற்றை இருள் சூழ்ந்த இரவு சொல்லித்தருகிறது.உன் நினைவு ஏற்படுத்தும்
பள்ளங்களும் அவை நிரப்பும் கவிதையும் அவற்றுள் உண்டு
இரவில் தவறாது வரும் என் இனிய இருள் சிநேகிதன் வந்து விட்டான். இருளில் எதுவும் தெரியாது என்பார்கள். என் கண்ணுக்கு இருள் தெரிகிறது...
--*--*--
'என் பிள்ளைக்கு என்ன புடிக்கும்னு எனக்கு தெரியாதா' என்ற உன் பாசம் தான் என்னை தனி வீடு வரை அழைத்து சென்றதென்பதை அறிவாயா அம்மா?
என் ரிப்போட் கார்ட் வரும் சமயங்களில் எல்லாம் நம் வீட்டு பிரம்பு எப்படி காணாமல் போனது என்று அப்பாவுக்கு
கடைசி வரை தெரியவே இல்லை அம்மா...
'நிஜமாவே போய்டப்போறாங்க. கூப்பிடுங்க' என்று என் மீதான கரிசனையில் முதன்முதலில் அப்பாவிடம் நீ குரலுயர்த்திய அன்று அப்பாவே கொஞ்சம் ஆடித்தான் போனார்
'என்கிட்டே சொல்லிட்டு தாங்க போனான்' என்று ஐநூறு முறை நீ எனக்காக சொல்லிய பொய்யை அப்பாவும் நம்பியது போலே கடைசி வரை நடித்தார்
'எங்கேடா இருக்கே? சாப்பிட வரலையா?' என்ற உன் அலைபேசி அழைப்பிற்கு பிறகு எனக்கேனம்மா இன்னும் அதிகமாய் பசிக்கிறது...
வீட்டை இடித்து கட்டும் போது தான் பார்த்தேன் அடுக்களையில் அம்மாவின் காய்ந்து போன கண்ணீர் கோடுகளை
இன்று அப்பாவுக்கு
வந்த தலைவலிக்கு மாய்ந்து மாய்ந்து தைலம் போடும் அம்மாவின் இரண்டு வருட முதுகுவலி அப்பாவுக்கு
இன்றும் தெரியாது...
தான் வைத்த பேர் திடீரென்று வாயில் வராமல் அம்மா அழைக்கும் 'டேய் இவனே' என்ற பெயர் அதைவிட நன்றாகவே இருக்கிறது.
நான் விலக விலக முதுமை என் தாயை நெருங்குகிறது. இல்லை... மாற்றி கூட சொல்லலாம்
கரியடுப்பில் புகையூதி படிக்கவைத்த
தாயை கோபுரத்தில்
வைக்க ஆசை.காலம் கைகூடிநின்ற போழ்து ஓடிப்போய் சொன்னதற்கு சலனமில்லாமல்
சிரிக்கிறாள்
மனைவி உணர்த்திய பொய்
'உன் அப்பாவை நான் தான் சமாளிக்கணும்' என்று அம்மா என்னிடம் சொல்லியதெல்லாம் சுத்தப்பொய் என்று திருமணமான பின் தான் எனக்கு புரிந்து அப்பா
பாசப் புகைப்படம்
நாம் மூவரும் எடுத்துக்கொண்ட புகைப்படத்தில் என் மகன் என்னையும், நான் உன்னையும், நீ என் மகனையும் பார்த்து கொண்டு நிற்கிறோம் அப்பா...
மறை முகம்
'அப்பாவுக்கு தெரியாம குடுக்கிறேன்' என்று அம்மா கொடுத்த பணமனைத்தும் நீ கொடுத்தது தான் என்பதை கடைசி வரை நான் அறிந்து கொள்ளவே இல்லை அப்பா
பெருந்தவறு
ப்ராக்டிக்கல் என்று பொய் சொல்லி வாங்கிய பணத்தில் படத்திற்கு போய் வந்த நாளில் 'ஈசியா இருந்துதாப்பா' என்று நீ கேட்டபோது நான் தனியறையில் போய் அழுதேன்...
தந்தை மனம்
அக்கா திருமணம் முடிந்து அத்தானுடன் சென்ற அன்று தாளாமல் கேவி கேவி நீயழுததை பார்த்து நீ கோழையென்று கூட நினைத்திருக்கிறேன் அப்பா
கண்டிப்பு
கண்டிப்பு என்பது அம்மாவை பொறுத்தவரை கண்துடைப்பு... அப்பாவை பொறுத்தவரை கண்காணிப்பு
தந்தையுமானவர்
நான் அழுகையில் என்னுடன் சேர்ந்தழும் அம்மாவை விட, என் அழுகையின் காரணத்தை தேடி நீக்கும் உன்னையா இதுவரை நான் புரிந்துகொள்ளவில்லை அப்பா...???
வாழ்க்கை பாடம்
எவ்வளவு தாமதமாய் புரிகிறது அப்பா... பாசத்தை கற்று தருபவள் அம்மாவென்றும், வாழ்க்கையை கற்று தருபவன் நீயென்றும்
நொறுங்கிப்போனேன்
நான் சிகரட் பிடிக்கும் போது பார்த்து விட்டு நீ சொன்னாய் அப்பா 'நான் பார்த்தது தப்பில்ல. உன் புள்ளை பாத்திடாம...'#நொறுங்கிப்போனேன்
பதின்மவயது தப்பு
பதின்வயதில் நான் பண்ணிய தப்புகளை அம்மாவிடம் சொல்லாமல் தனியாகத்தான் கண்டித்தார் அப்பா...அவருக்கு என்னைவிட அம்மா மேல் பாசம் அதிகம்
அம்மாவின் சுயநலம்
அப்பாவை கோபக்காரராக சித்தரித்ததில் அம்மாவின் சுயநலம் கிஞ்சித்தேனும் இருக்கக்கூடும்...
பரிதாப பார்வை
நம் பாசத்தை பங்குபோட அம்மா,அக்கா, தங்கை, மனைவி,மகள் என்று பெண்கள் கூட்டம் முண்டியடிக்கையில் எத்தனை பேர் அப்பாவின் பரிதாப கண்களை பார்த்திருக்கிறோம்...
--*--*--
மௌனப்பாசம்
பாசமென்றாலே அம்மா தான் என்று சொன்னாலும் கோபப்படாமல் அமைதியாக சிரித்துக்கொண்டிருக்கும் அப்பாவின் பாசம் அலாதியானது...
மனைவியெனும் மூத்த குழந்தை
கொ(கெ)ஞ்ச வேண்டும் என்று எதிர்பார்த்தே கோபப்படுவது குழந்தைகள் மட்டுமல்ல... மனைவியும் தான்
மறத்தல் அழகு
இரவு கோபித்துக்கொண்டு திரும்பி படுத்துகொண்டது மறந்து போய் காலையில் எனைக் கட்டிக்கொண்டு நீ தூங்கும் அழகே அழகு...
மெல்லியள் இசை
ஒரு துளை புல்லாங்குழல்... #உன் வாய்
வழியும் காதல்
தாமதமாய் நான் வரும் நேரங்களில் வாசலில் எனை பார்த்ததும் உன் கண்ணோரம் வழியும் கண்ணீரோடு சேர்ந்து காதலும் வழிகிறது...
இயேசுவின் எக்காளம்
மனைவியின் வற்புறுத்துதலுக்காக காலை சர்ச் போயிருந்தேன்... 'வர வச்சிட்டேன் பாத்தியா...' என்று எக்காளமிட்டார் இயேசு
பாசப்பாத்தி
வீட்டுக்கு லேட்டா போனவுடனே சூடா கிடைத்தது திட்டு மட்டுமில்ல, சப்பாத்தியும் தான்... #மனைவி அமைவெதெல்லாம்...
உறுத்தல்
சாலையின் நடுவே கிடந்த, அவசரத்தில் எடுத்து போடாமல் வந்த கல் மனதில் இடறிக்கொண்டே இருக்கிறது... #எத்தனை பேர் விழுந்தனரோ
--*--*--
என்னியல்பு
'நான்' இறந்த பிறகு தான் நிம்மதியாக இருக்கிறேன்...
இலகு மனம்
தலைக்கனம் இல்லாததால் மனம் லேசாகவே உள்ளது...
முகமூடி
தனிப்பட்ட அடையாளங்களை தேடி அலைந்ததில்லை . கழட்டி வைப்பது பெரும்பாடாகவே இருப்பதால்...
மதநெறி
பால்யத்தில் தீபாவளிக்கு தெருவெங்கும் வெடி வெடித்து கொண்டாடிய சக தோழர்களை பார்த்து எனக்கும் பட்டாசு வேண்டும் என அடம்பிடித்த அன்று 'நாம கிறிஸ்மசுக்கு போடுவோம்பா' என்று என் தந்தை சொன்னதை என் மகனுக்கு நான் சொல்லவில்லை. பிஞ்சுகளின் கொண்டாட்டத்திற்கு மதம் கிடையாது...
கடவுளெனும் ஈகோயிஸ்ட்
கேட்டால் தான் கொடுப்பார் என்றால் கடவுளை விட பெரிய ஈகோயிஸ்ட் யாரும் இருக்க முடியாது...
நாமே கடவுள்
மேனேஜர் அறையில் மேனேஜரே கிடையாது. நம் அப்பாலஜி லெட்டரில் நாமே கையெழுத்து வைத்து சிரித்து கொண்டே திரும்பி விடுகிறோம்... #கோயில் - கடவுள்
--*--*--
விளிம்பு நிலை மனிதர்கள்
பார் வாசலிலோ பார்கிங்கிலோ பாவமாய் சல்யூட்டடிக்கும் தாத்தாவுக்கு ஐந்தோ பத்தோ கொடுத்து விடுங்கள். வீட்டில் 'பேட்டரி பொம்மை' கனவோடு அவர் பேத்தி காத்திருக்கலாம்
இரை தேடும் கொக்கு
கல்யாண வீட்டில் களிப்போடு விருந்துண்ணும் கூட்டம் போல், அறுவடை யந்திரத்தின் பின்னும் முன்னும் வெண்ணிற கொக்குகள்...
உழைப்பாளி
அற்பமாக கவனம் ஈர்க்கிற அந்த விளம்பர பலகை நிழலில் அதை சிறிதும் சட்டை செய்யாத ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளி
விளிம்பு நிலை
காலியான ரோடையும் மழைத்தூரலையும் கலங்கிய கண்களோடு பார்த்துகொண்டிருந்த ரோட்டோர இட்லி கடைக்காரரை பார்த்தபின் அம்மழையை ரசிக்கமுடியவில்லை...
நிதர்சனம்
நிஜமாகவே சில்லறை இல்லாத போது நிராகரிக்கப்படும் பிச்சைகாரர்களின் முகச்சுளிப்பு சலிப்பை தருகிறது...
--*--*--
சிரிக்காதே... கருணை கொலை இந்தியாவில் சட்டவிரோதம்.
'மெய்'க்காவலன்
உன் 'மெய்'க்காவலனாக நான் மட்டுமிருக்க ஆசைப்பட்டேன். ஆடைகளை களைந்து விடு
காமப்பார்வை
மூட வேண்டியதை விட்டு முகம்மூடி கிடக்கிறாய். விரல்களின் வழியே நான் ரசிக்கிறேனா என்று நோட்டம் வேறு...
இரவுக்கு ஆயிரம் கண்கள்
என்னோடு சேர்ந்து உன் நிர்வாணம் ரசிக்கும் அந்த இருளை விரட்ட வழி சொல்லேன்...
--*--*--
ஆயத்த அவயம்
'இன்னைக்கு என்ன ரொமான்ஸ் பேச்சா இருக்கு' என்ற போதே உன் அவயங்கள் அனைத்தும் தயாராகிவிட்டன என்றறிந்து கொண்டேன்...
சொர்க்க வனம்
நீ பசித்த புலி என்பதை மறைக்க எனை காய்ந்த மாடு என்று சீண்டுவதை ரசிப்பதாய் நிதம் நடிக்கிறேன்...
மறைபொருள்
'இன்னிக்குமா...' என்பதை நீ சொல்வதில் புரிந்து கொள்ளலாம் இன்றைக்கு உண்டா இல்லையா என்று...
கொஞ்சம் பொறு
போதும் போதும் என்பது கொஞ்சம் பொறு என்றர்த்தம்...
இரண்டாம் ஸ்பரிசம்
இரண்டாவது ஸ்பரிசத்தை நீ அறிமுகப்படுத்தி வைக்கும் வரை முதல் ஸ்பரிசம் தான் மொத்தமும் என்றே எண்ணியிருந்தேன்
மறைபொருள்
'வரும்போது கொஞ்சம் பூ வாங்கிட்டு வந்துருங்க...' என்பதே பல வீடுகளில் கோட்வேர்டாக இருக்கிறது... #அவதானிப்பு
பரிமாறல்
கோப்பைகளை தூர வைத்துவிட்டு வா... மது பரிமாறிக்கொள்வோம்
முத்தம் வாங்கிக்கொள்
மீசை குத்துகிறது என்று நீ சொல்வது கொஞ்சம் மூச்சு வாங்கி கொள்ளவா...
அவசர முத்தம்
நீ நிதானமாய் தருவதை விட அவசரமாய் தரும் முத்தம் ருசியாகவே இருக்கிறது...
வெட்கம்
ரொம்ப இளைத்து விட்டாய் . உன் வெட்கம் உன்னை பிடுங்கி தின்று விட்டதோ...
இடையில் முத்தம்
கேட்க பயந்திருக்கும் எனக்கும் தரக் காத்திருக்கும் உனக்கும் நடுவில் முத்தம் வெகுநேரமாய் காத்து நிற்கிறது
வருடல்
உன் முடிவருடும் உரிமை தராவிடினும் அடிவருடும் பாக்கியமேனும் தருவாயா...
பகலிரவு
முதன்முதலில் உன் விரல் தொட்ட கணம் நினைவு வருகையில் பகலென்றும், உன் இதழ் பட்ட இருள் நினைவு வருகையில் இரவென்றும் கொள்கிறேன்
ஒற்றைப்பரு
என் காதலை உன்னிடம் சொல்லிவிட்டு பதிலுக்காய் காத்திருந்தேன். உன் முகத்தில் புதிதாய் அரும்பியிருக்கும் ஒற்றைப்பரு உனக்குமுன் சொல்லிவிட்டது.
விருப்பம்
காதோடு மட்டுமே உன்னுடன் பேசிக்கொண்டும், அவ்வப்போது சிணுங்கி கொண்டும், உன் இதயம் அருகிலே இடம்பிடிக்கவாவது உன் mobileஆக பிறக்கவேண்டும்..
சபலம்
சலனமில்லாமல் ஓடிக்கொண்டிருந்தேன். என்னில் முகம் பார்த்து பொட்டு வைத்தாய். என்னணம் அடக்குவேன் சுனாமியாய் எழும் சபல அலைகளை...
நீ
தேவதை - நான் பார்க்காத கற்பனை ;;;; நீ - நான் பார்த்த நிஜம்...
விழியேக்கம்
நீ வந்து ஊதிவிடுவாய் என்பதற்காகவே என் கண்ணில் விழுந்த தூசியோடு காத்திருக்கின்றேன்...
பொய்மெய்(மை)
'சினிமா போலாமா...' என்ற என் கேள்விக்கு ஒரே நேரத்தில் 'சரி'என்று உன் கண்கள் உண்மையும், 'வேணாம்' என்று உன் இதழ்கள் பொய்யும் சொல்கின்றன
காதல்
கூப்பிடுவது நீயாக இருக்கவேண்டுமென்று ஓடி வந்து எடுத்த தொலைபேசி காதலை போல இல்லை இன்றைய அலைபேசி காதல்...
கா(த்திருத்)தல்
'சாரி ரொம்ப நேரமா வெயிட் பண்றீங்களா...' என்று உன் இதழ்கள் கேட்டு முடிக்குமுன்னே கெஞ்சலான உன் கண்கள் கொட்டி விடுகிறது என் மீதான அத்தனை காதலையும்.
--*--*--
பேருண்மைகள்
பேரிரைச்சலாய் கடந்து செல்லும் பொய்களின் மத்தியில் மயான அமைதியாய் கண்மூடியபடி பேருண்மைகள்...
முரண் சமூகம்
ஆண்களின் துணிச்சலை 'வீரம்' என்றும், பெண்களின் சாந்தத்தை 'அடக்கம்' என்றும் கொண்டாடும் சமூகம் பெண்களின் துணிச்சலை 'திமிர்' என்றும் ஆண்களின் சாந்தத்தை 'கோழை' என்றும் விளிக்கிறது...
ச்சீய்...,
ச்சீ... என்ற ஈரெழுத்துக்கு பெண்களகராதியில் 'இன்னும்' என்றர்த்தம் போல...
வெட்கம் வரும் பின்னே
எல்லாம் முடிந்த பிறகு கிடைத்ததை வைத்து மூடிக்கொள்வாயே... அதில் என் உள்ளாடையும் அடக்கம்
முதல் நினைவு
'நம் திருமண புகைப்படத்தை பார்த்து சிரித்து கொண்டிருந்தேன்' என்றாய். அன்றைய இரவை நினைத்து என்று எனக்கு தெரியும்...
ச்சீய்...,
'என்ன இது கெட்ட பழக்கம் வாய் வச்சி குடிக்கிறது, அண்ணாந்து குடிங்க' என்கிறாய். 'எப்பவுமேவா?' என்றால் ஒரு நொடி யோசித்து 'ச்சீ...' என்று அடிக்க வருகிறாய்
வெட்கமூடி
முடிந்த பின்னர் எப்பொழுதும் நீ ஏன் முகம் மூடி வெட்கமெனும் முகமூடி அணிந்து கிடக்கிறாய்??
ஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே...
கவிதை சொல்லேன் என்றேன். சிரித்து இழுத்தணைத்து விளக்கணைத்தாய். முடிந்ததும் என் மேனி முழுவதும் கவிதை கிறுக்கல்கள். 'கவிதை எப்படி' என்று கண்சிமிட்டுகிறாய்.
அனிச்சை
கதவு திறந்ததும் நீ சரி செய்த வரை என் பார்வை அங்கே செல்லவில்லை ... #முந்தானை
மறந்த வெட்கம்
முடிந்தபின் என் வியர்வையை துடைக்க துணி தேடி கிடைக்காமல் ம(றை)றந்திருந்த வெட்கத்தையெல்லாம் மொத்தமாக கொட்டிவிட்டாய்...
முனகல் முற்றம்
'ம்' என்ற எழுத்து எத்தனை வகைப்படும் என்று இரவுகளில் தான் தெரிகிறது... ம்ம்ம்ம்
இதழாடும் முன்றில்
ஈதல் இசைபட வாழ்தல் போல...
காதல் இதழ்பட வாழ்தல்
காதல் இதழ்பட வாழ்தல்
சிரிப்'பூ'
படுக்கையில் கசங்கி உதிர்ந்து கிடக்கும் மலர்கள் ஏளனமாய் சிரிக்கின்றன...'இதுக்குதான் அரை மணி முன்னாடி தலையிலே வச்சீங்களாக்கும்' என்று
முரணிருக்கம்
பெண்கள் பலகீனமானவர்கள் என்பதை சில இரவின் அணைப்புகளின் போது நம்பவே முடிவதில்லை...
மெல்லுடல்
'ஐயையோ!! உன் மெல்லுடலுக்கு ஆடைகள் கனமே' என்றெண்ணம் வருவது பெரும்பாலும் இரவுகளில் மட்டுமே...
வாயு பக(ட)வான்
மறைக்கும்பொருட்டு மேலாடையை கொஞ்சம் முன்னால் இழுத்து சென்றாலும் அதீத காற்று காட்டிவிடுகிறது அழகையும் அதன் அளவையும் ...
--*--*--
முக வரி
முதுமையின் முகவரி முக வரி
வன்புணர் கருத்து
வலிந்து திணிக்கப்படும் கருத்துக்களுக்கும், வன்புணர்வுக்கும் என்ன வித்தியாசம்?
பருவம் தொலைத்தவன்
எனக்குத் தெரிந்தே என் கண்முன் தொலைந்த விலைமதிப்பில்லாத பொருள்...பருவம்
விளிம்பு நிலை
கடவுளையும் நம்பி பார்ப்போமே என்ற நிலை தான் நாத்திகனின் கஷ்ட கால விளிம்பு...
--*--*--
நான்...
ஒழுங்கின்மை எனது
ஒழுங்கு
கோணல் எனது
நேர்மை
நேரந்தவறுதல் எனக்கு
தவறல்ல
பிடிவாதம் என் அடிநாதம்
குறிக்கோளில்லா வாழ்க்கையே
என் குறிக்கோள்
கெட்டவர்களே என்
சகவாசம்
போக்கிரி
என்றழைப்பர் என்னை
என்னிடமும்
திருத்திக் கொள்ள முடியாத
கெட்டகுணங்கள் இரண்டுள...
.
மன்னித்தல் , மறத்தல்
ஒழுங்கின்மை எனது
ஒழுங்கு
கோணல் எனது
நேர்மை
நேரந்தவறுதல் எனக்கு
தவறல்ல
பிடிவாதம் என் அடிநாதம்
குறிக்கோளில்லா வாழ்க்கையே
என் குறிக்கோள்
கெட்டவர்களே என்
சகவாசம்
போக்கிரி
என்றழைப்பர் என்னை
என்னிடமும்
திருத்திக் கொள்ள முடியாத
கெட்டகுணங்கள் இரண்டுள...
.
மன்னித்தல் , மறத்தல்
தூறல் தொட்டவுடன்...
மழை அதிகரிக்க அதிகரிக்க மனைவியின் ஸ்பரிசத்தின் தேடலும்...
அவள் நினைவு
நான் கவிதையை கொல்கிறேன்... நீ கவிதையாய் கொல்கிறாய் ... #Missudear
அவள் நினைவு
உன் நினைவென்னும் வேட்கையை என்னணம் தணிக்கும் பஞ்சில் நனைத்து நாக்கில் நீர் தருவிக்கும் உந்தன் குறுஞ்செய்திகள்... #Missudear
அவள் நினைவு
என் பெண் தோழிகளை பற்றி சொல்லும் போது நீ சிரித்துகொண்டாலும், அந்த இரவின் கூடுதல் இறுக்கம் உன்னை காட்டிக்கொடுத்து விடுகிறது... #Missudear
அவள் நினைவு
இயந்திரக் கழுகின் வயிற்றில் பயணிக்கும் போது வெளியில் மிதக்கும் உன் நினைவு மேகங்கள்... #Missudear
--*--*--
தூரதேசத்தில் இருக்கும்போது
அலைபேசியில் மழலை கேட்கும் 'அப்பா எப்பப்பா வருவே'க்கு பிறகான நொடி மௌனத்திற்கும் பின் துளிர்க்கும் ஒரு சொட்டு கண்ணீருக்கும் என்ன விலை?...
--*--*--
யுகமாயினும் நீங்கா வலி
பிரிவு எனும் மூன்றெழுத்திலெல்லாம் உன் இழப்பை உணரவைக்கவியலாது. இன்னும் மூன்று யுகம் வேண்டுமெனக்கு...
நினைவுகள் சுமக்கும் தலையணைகள்
என் வெளியூர் பயணங்களின் போது யோகக்காரி நீ... நான் யாரோ படுத்திருந்த தலையணைகளோடும், நீ நாம் படுத்த தலையணைகளோடும்
என்னை பிழைக்கவிடு
என் புலன்களுக்கெட்டா தூரம் உன் நினைவுகளை கொண்டு சென்று விடேன். நான் பிழைத்து போகிறேன்...
நீயில்லாவிடினும்
தனிமை எப்படி இருக்கும் என்பதை உன் நினைவுகளை துரத்தி விட்டு ஒரு தடவையாவது அனுபவிக்க வேண்டும்...
காதலியலாமை
திருமண அழைப்பிதழ் தந்த அன்று தான் உன் கண்களில் காதல் தவிர்த்த இரண்டு விஷயங்களை பார்த்தேன்...உன் இயலாமையும் ,என் மீதான பரிதாபமும்
மது...மாது
அவள் குழி பறித்தாள் ... நான் மது நிரப்பியிருக்கிறேன்
கரிசனை
சேட்டை செய்து அடி வாங்கி ஏங்கியழுது தூங்கும் மகனை கண்களில் நீர் கோர்க்க தலை கோதா தகப்பன்கள் யாரும் உள்ளீரோ??
போர்வை
நடு இரவில் என் போர்வையையும் சேர்த்து இழுத்து தூங்கும் என் மகனைப்பார்த்து குளிரும் போச்சு, தூக்கமும் போச்சு...
குற்றவுணர்வு
அரைமணி கழித்து அழுது கொண்டே 'பென்சில் தொலையல. Bagகுள்ள தான் கிடந்திருக்கு..' என்று சொல்லும் மகனை அடித்த என்னை என்னணம் தேற்றுவேன்
இதம்
கட்டிலில் நான் கால் இடித்துகொண்டவுடன் ஓடி வந்து வாய் குவித்து ஃபூ ஃபூ என ஊதி 'இனி வலிக்காது சரியா' என்றென் மகள் சொன்னதும் வலி போயேபோச்.
சுபசகுனம்
காரை எடுக்கும் போதெல்லாம் 'எங்கே போறீங்க?' என்று கேட்டால் அது சுபசகுனமாகவே அமைகிறது, கேட்பது என் மகளாய் இருக்கும் பட்சத்தில்
மகள் உலகம்
'பாவம்ப்பா' என்றபடி மழையில் நனைந்து கொண்டே கோழிக்குஞ்சொன்ருக்கு தன் குடையை பிடிக்கிறாள் மகள். தடுக்க மனம் வரவில்லை..
(வெ)பிள்ளை மனம்
'அண்ணா அடிக்கிறாம்பா.அவன கடவுள்கிட்ட குடுத்துட்டு வேறே அண்ணா வாங்கிட்டு வாங்கப்பா' - மழலை மொழியில் மொபைலில் மகள்... உள்ளர்த்தம் பதற வைத்தாலும் சிரித்துக்கொண்டேன்...
ஓவியம்
ஓவியம் வரைய வாங்கிக்கொடுத்த 'புது க்ரேயானை' கையில் வைத்துக்கொண்டு தூங்குகிறது என் மகளெனும் ஓவியம்.
என் சமூகம்
ரிக்கவரி வேனின் பின்னால் தூக்கப்பட்டு போகும் காரின் பின் கண்ணாடி வாசகம் 'என் சமூகம் உனக்கு முன்பாக செல்லும்'
மனப்பான்மை
ஆவேசமான சண்டையின் போது, எதிராளி மனதின் அடிஆழத்தில் இருக்கும் தாழ்வு மனப்பான்மை தெரிகையில் சட்டென்று ஒருகணம் சண்டை ஸ்தம்பித்து விடுகிறது
ஆட்டுவித்தால்
பொம்மலாட்டம் ஆடும் ஆண்டவன் என் நூலை மட்டும் இன்னும் அசைக்கவே இல்லை...
தோழி
'குளிச்சிக்கிட்டு இருக்காப்பா.வந்தவுடுனே கால் பண்ணச் சொல்றேன். நல்லாருக்கியா?'ன்னு Girl Friendன் அம்மா சொன்னா ஒண்ணு நீ நல்லவன், இல்லேன்னா அந்தம்மா வெகுளி :))
யதார்த்த உவமை
தாண்டிப்போன சாக்கடையில் உன் கூந்தல் பூ விழுந்தது உன் வாழ்க்கை உவமையா? #குடிகார கணவன், ஊதாரி மகன், நோயாளி பெற்றோர்,தாங்கும் நீ
--*--*--
ரணமெனப்படுவது யாதெனின்
இரத்தபரிசோதனையின் போது நான்காவது முறையும் நரம்பு கிடைக்காது கதறி அழும் தன் மூன்று வயது மகளின் கால்களை கெட்டியாகபிடித்து கொண்டு விம்மலை உதடுகடித்து அடக்கி நிற்கும் தகப்பனிடம் கேளுங்கள்... மனதின் ரணம் என்றால் என்ன என்று... :'(
வலி
ஒரு வேகத்தில் என் வாயிலிருந்து விழுந்த வார்த்தைகளை பொறுக்கி எடுத்து கத்தி செய்து வைத்திருக்கிறாய்...
No comments:
Post a Comment