அடியேன்

Tuesday, 30 October 2012

குடைச்சல் கேள்விகள் - 1


சின்மயி - ராஜன் விவகாரத்தின் பின்னணி தெரிந்தும் அமைதியாக இருக்க முயற்சித்தாலும், சில நிகழ்வுகள் நம் வாயை கிளறிவிடுகின்றன. இப்பதிவு நேற்று மகேஷ் மூர்த்தி - சின்மயி இடையே ட்விட்டரில் நிகழ்ந்த ஒரு வாக்குவாதம் பற்றியது. இது பற்றிய முந்தைய விஷயங்கள் (அ) ஹிந்துஸ்தான் டைம்ஸ் வகைமை பற்றி தெரியாதோர் இதை ஒரு தடவை படித்துவிடுங்கள்


Followers எண்ணிக்கையில் ராஜன் வேண்டுமானால் மிக பின்தங்கி இருந்திருக்கலாம். ஆனால் PII score என்ற அளவீட்டில் சின்மயிக்கு அடுத்த இடத்தில் இருந்தார். (Chinmayi - 59 ; Rajan - 58.3).  PII score அளவீட்டின் படியே வரிசைப்படுத்தி இருந்தார் மகேஷ். Followers படி வரிசைப்படுத்த வேண்டுமென்றால், அதற்கு முந்தைய POLITICS என்ற தலைப்பில் வெறும் 50,000 followers கொண்ட சுப்பிரமணியம் சுவாமிக்கு மூன்றாவது இடமும், கிட்டத்தட்ட 5 Lakh followers கொண்ட குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு நான்காவது இடம் கொடுத்திருந்தார். அதுவும் அதே PII Score அளவீட்டின்படி தான். ''சுவாமியை எப்படி எனக்கு முன் நீங்கள் வைக்கலாம்'' என்று மோடி ஆர்பாட்டம் செய்தாரா?? சொல்லப் போனால் இருவரும் கண்டுகொள்ளவே இல்லை.  ஆனால் ராஜன் போன்ற ஒரு சாதாரணன் உடன் இருப்பதை தாங்க முடியாமல் அவனை நீக்கச்சொல்லி போராடினார் சின்மயி. போதாக்குறைக்கு மதன் கார்க்கியை அவ்விடத்திற்கு சிபாரிசு வேறு செய்தார். ஆனால் தான் அவ்வாறு சொல்லவே இல்லை என்றுவேறு சாதித்து கொண்டிருந்தார். இவை பழைய நிகழ்வுகள். 

நேற்று திடீரென்று மீண்டும் ட்விட்டரில் அதே பிரச்சினைக்காக அதே மகேஷ்மூர்த்தியும் சின்மயியும் மோதிக்கொண்டது தான் பரபரப்பு ... 

*) 'உங்களையோ ராஜனையோ எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியாது. ஆனால் ராஜன் பெயரை நீக்கச்சொன்னது நீங்கள். ராஜன் அவ்வாறு என்னிடம் எதுவும் கூறவே இல்லை'

*) 'நீங்கள் ராஜனை அவ்வகைமையில் இருந்து நீக்கச் சொன்னது தான் உண்மை' 

என்ற ரீதியில் ஆரம்பித்து...

*) வேண்டுமானால் காவல்துறையையும் ஊடகத்தையும் நீங்கள் திசைதிருப்பலாம். இணையத்திலுள்ளவர்களை ஏமாற்ற முடியாது'

*)    'தமிழ்நாடு காவல்துறை/வக்கீல்கள் கவனத்திற்கு... சின்மயி ஒரு பொய்யர்',  

*)    'ஏன் ராஜனை பொய்யுரைத்து காவல்துறையிடம் மாட்டிவிட்டீர்கள்' 

...என்று பொரிந்து தள்ளிவிட்டார். இதில் உச்சகட்டமாக மகேஷ் மூர்த்தி, சின்மயியை 'IDIOT' , 'FOOL'  என்றெல்லாம் வசைபாடி விட்டார். ஆச்சர்யமாக சின்மயி இதற்கு ' Please use your words carefully Mr.Muthy ' என்று ஒரே வரியில் முடித்துகொண்டார். 



இதில் என்னை குடையும் கேள்வி என்னவெனில் லட்சக்கணக்கானோர் முன்னிலையில் இவ்வாறு சகட்டுமேனிக்கு வசைபாடியவரின் மீது சின்மயி எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏன்?? (ராஜன் நேரடியாக இப்படி திட்டியதாக கூட இன்றுவரை ஒரு சான்றும் அவர்கள் காட்டவில்லை) 

அடுத்து, கமிஷனரிடம் புகார் கொடுத்தது பற்றி 'பாலியல் தாக்குதலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு' என்று ஒரு பத்திரிகையில் செய்தி வெளியிட்ட பொழுது, 'நாங்கள் அவ்வாறு செய்தி கொடுக்கவில்லை. அவர்களாகவே திரித்து போட்டுகொண்டனர்' என்று இணையத்தில் விளக்கம் சொன்னாரே தவிர அந்த பத்திரிகையிடம் நீங்கள் திரித்துப் போட்டு விட்டீர்கள்  என்று தெரிவிக்கவுமில்லை, அப்பத்திரிக்கையும் அச்செய்தியை இன்று வரை மறுக்கவுமில்லை. சின்மயியும் அப்பத்திரிகை மீது எவ்வித நடவடிக்கையும் இதுநாள்வரை எடுக்கவில்லை... ஏன்?? 

அது போலவே, ராஜ் டிவி யில் 'கோப்பியம்' நிகழ்ச்சியின் அறிமுக உரையில் பிரபல பாடகியையை ஆபாசமாக மார்பிங் செய்ததாகவும், இன்னும் என்னவெல்லாமோ கட்டுக்கதைகளை சொல்லி இவர் தான் அதை செய்தவர் என்று சின்மயி சொன்னதாக சொல்லி,  ராஜனை காட்டுகின்றனர்.இந்நிகழ்ச்சிக்கும் சின்மயி மறுப்பேதும் சொல்லவில்லை. அப்படிஎன்றால் ராஜ் டிவிக்கு அவர் அவ்வாறு தான்  பேட்டியளித்தாரா? பத்திரிகைக்கு காட்டிய சிறு எதிர்ப்பை கூட டிவிக்கு காட்டவில்லை. ஏன்??


(ராஜனின் மனைவி பேரை வேறு மாற்றிவிட்டார்கள். அந்த லட்சணத்தில் புலனாய்வு செய்கிறார்கள் புலனாய்வுப் புலிகள்)

ஆக நம் கண்முன்னே அவரை வசைபாடுபவர்களையும், திரித்து எழுதி அவரது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நபர்களை சின்மயி கண்டுகொள்ளாமல்/பெரிதுபடுத்தாமல் விட்டுவிடுகிறார் (அ) மன்னித்து விடுகிறார். ஆனால் ராஜன் மேல் மட்டும் ஏன் கைது நடவடிக்கை என்ற கேள்வி எழுவதை தடுக்க முடியவில்லை?? வெறும் மூவாயிரம்  followers மட்டுமே வைத்திருக்கும் அவரை தனக்கு சரிசமமாக நினைக்க மனம் ஒப்பவில்லையா?? அல்லது அவரை கைது செய்தால் சொந்தபந்தம்  என்று யாருமே கேள்வி கேட்க வரமாட்டார்கள் என்ற எண்ணமா?? 

'எந்தவித Backgroundம் இல்லாத / வசதியில்லாத ஒரு மாதச்சம்பளக்காரன் நம்மை எதிர்த்து பேசிவிட்டான். அவனை சும்மா விடுவதா' என்ற எண்ணமல்லாது வேறேது?? 

சரி. புகார் கொடுத்ததையாவது நேர்மையாக கொடுத்தாரா? ராஜன் பல்வேறு தருணங்களில் பல்வேறு காரணங்களுக்காக பேசிய சில முகம் சுழிக்கவைக்கும் ட்விட்டுக்களை தேடிப் பொறுக்கி எடுத்து கொடுத்துள்ளார். அதாவது 'ராஜன் இவ்வளவு கெட்டவன்' என நிறுவ முயற்சிக்கும் தந்திரோபாயம். சரி.. ராஜனை போல ஒரு கடைந்தெடுத்த பொறுக்கி சமூகத்தில் உலவுவது எல்லா பெண்களுக்கும் அபாயம் என்ற நல்லெண்ணமாகவும் இருக்கலாம். அவரிடம் 'ராஜன் மட்டும் தான் இணையத்தில் அப்படி பேசித் திரிகிறானா??' என்று கேட்டால் 'நான் பார்த்தவரைக்கும்' என்ற பதில் கூட வரலாம். மேலும் ராஜன் மட்டுமல்லாது ராஜனின் ஆதரவாளர்கள் பேசிய/ஏசிய பேச்சுக்களுக்கும் ராஜனே பொறுப்பு என்றும் சொல்லிவிட்டார். இருக்கட்டும். 

கீழே காணும் ஸ்க்ரீன்ஷாட்டில் உள்ளது சின்மயி அவர்களின் பதிவில் இடப்பட்ட காமன்டுகளே. 






எவ்வளவு நாகரீகம்?? ராஜன் ஆதரவாளர்கள் பேசியவைக்கு ராஜன் பொறுப்பு என்றால் சின்மயி ஆதரவாளர்கள் பேசியதற்கு யார் பொறுப்பு?? இவ்வளவு வக்கிரமாக பேசும் இந்த  நபர்கள் மட்டும் என்ன  சமூகத்திற்கு நலன் விளைவிப்பவர்களா?? இவர்கள் மேல் ஏன் வழக்கு போடவில்லை??. அட.. வழக்கு போடவேண்டாம். ஒரு வார்த்தை. 'வக்கிரமாக பேசாதீர்கள்' என்றாவது சொன்னாரா?? அப்போ ராஜனுக்கும் சின்மயிக்கும் என்ன வித்தியாசம்?? 

தன்னை எதிர்ப்பவர்கள் யாராக இருப்பினும் அவர்களை உடனே கெட்டவன் என நிரூபிக்கவே பார்க்கிறார். அதற்கு மற்றுமொரு உதாரணம். மகேஷ்மூர்த்தி க்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் முடிந்த சில நிமிடங்களில் வேறுயாரோ மகேஷ்மூர்திக்கு எதிராக எழுதிய ஒரு ட்விட்டை எங்கேயோ தேடிப்பிடித்து உடனே அந்த ட்விட்டை RT செய்கிறார். 



''என்னை குறை சொல்லும் அளவுக்கு நீ ஒன்றும்  யோக்கியனில்லை'' என்று நிறுவ முயற்சிப்பதே அவருடைய attitude. இதைத்தான் ராஜன் விஷயத்திலும் பெரிய அளவில் நடத்திக்காட்டி கொண்டிருக்கிறார். நியாயமாக அவரை harassment செய்திருந்தாலோ மன உளைச்சலுக்கு ஆளாக்கியிருந்தாலோ அது சம்பந்தமான வழக்கு தொடுப்பதோடு, அது சம்பந்தமான ஆதாரங்களை தானே கொடுக்கவேண்டும். இதென்ன குறுக்குப்புத்தி?? 
.
.
.
டிஸ்கி :-  ராமாயணத்தில் 'வாலி'யின் நேரெதிர் நின்று போர் புரிந்து அவரை வெல்லமுடியாது என்று, நீதி(!)யை நிலைநாட்ட மறைந்திருந்து கொன்றாராம் ராமன். 'சுக்ரீவன்' துணையோடு...
ஆனால் இன்றும் வாலியைத்தான் 'வீரன்' என்று போற்றுகின்றனர். 

12 comments:

  1. "எவ்வளவு நாகரீகம்??
    ராஜன் ஆதரவாளர்கள்
    பேசியவைக்கு ராஜன்
    பொறுப்பு என்றால்
    சின்மயி ஆதரவாளர்கள்
    பேசியதற்கு யார்
    பொறுப்பு??
    இவ்வளவு வக்கிரமாக
    பேசும் இந்த
    நபர்கள் மட்டும் என்ன சமூகத்திற்கு நலன்
    விளைவிப்பவர்களா??
    இவர்கள் மேல் ஏன்
    வழக்கு போடவில்லை??.
    அட..
    வழக்கு போடவேண்டாம்.
    ஒரு வார்த்தை.
    'வக்கிரமாக பேசாதீர்கள்'
    என்றாவது சொன்னாரா??
    அப்போ ராஜனுக்கும்
    சின்மயிக்கும் என்ன
    வித்தியாசம்??"

    ReplyDelete
  2. நல்ல பதிவு டேவிட் அண்ணா...கடைசி வரை வாலியை கொன்றதுக்கு சரியான காரணம் ராமனிடம் இருந்து வரவில்லை..அதேபோல் அந்த பக்கம் இருந்தும் பதில் வராது ..

    ReplyDelete
    Replies
    1. ஆனால் அவர்கள் ராமனை வழிபடுபவர்கள். நம் கருத்து அங்கே செல்லுபடியாகாது. அவர்களைப் பொறுத்தவரை வாலி வில்லன் தான்

      Delete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. சமீபத்தைய தரப்படுத்தல் ஒன்றில் ராஜனை 100 ஆவது இடத்தில குறிபிட்டதும். சின்மயியை சேர்க்காததும் கூட அவருடைய தற்போதைய புகைச்சலுக்கு காரணமாயிருக்கலாம்.

    ReplyDelete
  5. Thanks for this informative write-up. I linked this in my facebook page.

    ReplyDelete
    Replies
    1. நன்றி. இது தான் நிஜம். இது சின்மயிக்கும் கூட தெரியும். எல்லாம் பாழாப்போன ஈகோவால் வந்த வினைகளே...

      Delete
  6. புகழுக்காக செய்யப்பட்ட நாகரீகப்படுகொலை என்றுதான் இதை எடுத்துக்கொள்ள வேண்டியதிருக்கிறது. ஆண்-பெண் சம உரிமை, கருத்துச் சுதந்திரம் இவை எல்லாவற்றின் பின்னிலும் ஒருவரைஒருவர் வென்றுவிடவேண்டும் என்கிற ஆவேசம் ஒளிந்திருக்கிறது. மனிதமனோநிலையில் சமீபமாய் ஏற்பட்டிருக்கிற இந்த அபாயகரமான மாற்றத்திற்கு பொதுவெளியில் பறிமாறப்படும் கருத்துக்கள் சாட்சியாக, தண்டனையில் முடிகிறது. அடிப்படையில் இருவரும் சமம் என்கிற வெகு அடிப்படையான ‘பாரதி காலத்திலிருந்து வலியுறுத்தப்படுகிற’ கருத்திற்கு மதிப்பளிக்க முயலவேண்டும்.

    ReplyDelete
  7. ஒரு பிரபல பாடகி, இவ்வளவு கேவலமா நடந்து கொண்டு, சதி திட்டம் தீட்டி , அப்பாவிகளை சிறைக்கு அனுப்பியது மன்னிக்க முடியாத செய்கை. மனம் மிகவும் வேதனை அடைகிறது. கீச்சுலகத்தை சூழ்ச்சி செய்து இரண்டாக பிரித்து ஆள நினைக்கிறார். அவர் சார்ந்த சினிமா உலகத்தில் இல்லாத ஒழுங்கீனமா? ஆபாசமா? அதை ஒழிக்க இவர் தலைமை தாங்கி போராட முன்வருவாரா? அப்படி போராடினால் இவரின் கதி என்னவாகும். "அங்கிள் அங்கிள் போலிஸ் அங்கிள்" என்பவர் சிதம்பரம் நடராசன் பெயர் கொண்டவராக இருந்தால் , நேர்மைக்கு சான்றான அவரைக்கூட நம்பவைத்து , எந்த விதமான பூர்வாங்க விசாரணையும் இல்லாமல் கடுமையான சட்ட பிரிவுகளில் மிக வேகமா குற்றம் சாட்டி அப்பாவிகளை கைது செய்து சிறையில் தள்ளி அவரின் புகழுக்கும் களங்கம் ஏற்படுத்திவிட்டார் இந்த ஈகோ பாடகி. நிச்சயம் காலம் பதில் சொல்லும். நீதி கிடைக்கும். அருமை நண்பரே வாழ்க உங்கள் போராட்டம். வளரட்டும் உங்கள் எழுச்சி.

    ReplyDelete
  8. பணம்,புகழ்,அதிகாரத்தின் துணை இவை இருந்தால் சாதாரனனை எந்த அடிப்படை ஆதாரமும் இன்றி உள்ளே வைக்க முடியும் என்பதைதான் இந்த நிகழ்வு காட்டுகிறது. நடவடிக்கைகளில் பாரபட்சம் அப்பட்டமாகத் தெரிகிறது. பிரபலம் இல்லாததால் நாம் மூடிக்கொண்டு நம் வேலையைப் பார்க்க வேண்டியதுதான் :-(((

    ReplyDelete
  9. போனது ராஜனின் மரியாதை அல்ல
    சின்மயின் மரியாதை .....

    ReplyDelete
  10. பைசா செலவில்லாமல் தன்பக்கம் ஜனத்தை திருப்பும் விளம்பரம்

    ReplyDelete